×

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் புதிய தேதி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டி  வழக்கு தொடரப்பட்டதால் தேர்தல் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய தேர்தல் கால அட்டவணை நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது. அதன்படி நவம்பர் 2, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.  மூன்று கட்ட வாக்குப்பதிவுகளும் முடிந்த பின்,  ஒரே நேரத்தில் நவ.17ம் தேதி வாக்குக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags : Novuchcheri ,Local Election , Puducherry, Local Election, Date
× RELATED நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக...