×

ஓபிசி கணக்கெடுப்பு நடத்த தெலங்கானாவில் தீர்மானம்

ஐதராபாத்:  இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓபிசி) சமீபத்திய எண்ணிக்கையை அறிய, நாடு முழுவதும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தும்படி ஒன்றிய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு இதை நிராகரித்து வருகிறது. தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவம், ஓபிசி கணக்கெடுப்பை நடத்துவதற்கு கடந்த 5ம் தேதி ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், தெலங்கானா சட்டப் பேரவையில் நேற்று பேசிய முதல்வர் சந்திர சேகர ராவ், ‘‘நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாநில சட்டபேரவைகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மாநில மக்கள் தொகையில் 50 சதவீதம் வரை பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் போதுமான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கு, துல்லியமான மக்கள் தொகை புள்ளி விவரங்களை பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்,” என்றார். தொடர்ந்து, ஓபிசி கணக்கெடுப்பை நடத்தக் கோரிய தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். அது, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Tags : Telangana ,OBC , OBC Survey, Telangana, Resolution
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!