அமைதி நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு: பிலிப்பைன்ஸ், ரஷ்யாவை சேர்ந்தவர்கள்

ஓஸ்லோ: இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 2 பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான நோபல் பரிசு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், வேதியியல், இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நோபல் பரிசு குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆன்டர்சன் நேற்று அறிவித்தார். இதில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெஸ்சாவுக்கும், ரஷ்யாவை சேர்ந்த டிமித்ரி முரதோவ்வுக்கும்  இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவர்கள் இருவரும் பத்திரிகையாளர்கள் தங்கள் நாடுகளில் கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக இவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டி, இந்த பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

* பிலிப்பைன்சில் ‘ராப்லர்’ என்ற பெயரில் இணையதள செய்திச் சேனலை கடந்த 2012ல் தொடங்கியவர்களில் மரியா ரெஸ்சாவும் ஒருவர். இந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட்டின் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையை இது கடுமையாக கண்டித்து, செய்திகள் வெளியிட்டு வருகிறது.

* ரஷ்யாவில் வெளியாகும், ‘நோவயா கசட்டே’ என்ற பத்திரிகையில் டிமித்ரி முரடோவ் பணியற்றி வருகிறார்.

Related Stories:

More
>