தடுப்பூசி போடாதவர்கள் அலுவலகம் வரக் கூடாது: டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி:  கொரோனா 2வது  அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. தற்போது இங்கு தொற்று,  பலி எண்ணிக்கைகள்  கணிசமாக குறைந்துள்ளன. இதனால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ‘டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம்’ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை கூட இம்மாதம் 15ம் தேதிக்குள் போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றவர்கள் அக்டோபர் 16ம் தேதி முதல் அலுவலகத்துக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவர்கள் தடுப்பூசி போட்டார்களா? இல்லையா? என்பது தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது ஆரோக்யா சேது ஆப்பின் மூலம் சரிபார்க்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>