×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மழைநீர் கால்வாய்களை கலெக்டர் திடீர் ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் ஆய்வு செய்தார். மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். மேலும், அத்திப்பட்டு புதுநகர் உள்ள பி.பி.சி.எல்./எச்.பி.சி.எல்/ என்.டி.இ..சி.எல்/இந்தியா சிமென்ட்  ஆகிய  நிறுவனங்களுக்கு நேரில் சென்றார்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், பொன்னேரி ஆர்டிஓ செல்வம், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், செயற்பொறியாளர் ராஜவேல், மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் டி.சாந்தி, கே.சாந்தி மற்றும் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

Tags : Northeast , Northeast Monsoon, Precaution, Rainwater, Collector
× RELATED திருவொற்றியூர் திமுக கூட்டத்தில்...