பத்திரிகை,அரசியல் கட்சியினர் மீது பதிவான 50 அவதூறு வழக்குகள் ரத்து: செஷன்ஸ் கோர்ட் உத்தரவு

சென்னை:  அதிமுக அரசால்  பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட, 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிமுக அரசை விமர்சித்ததற்காக பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது சுமார்  100க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்டது. அந்த அவதூறு  வழக்குகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி அடிப்படையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் கட்டமாக அதிமுக அரசால் போடப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது போடபட்ட அனைத்து அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு அவதூறு வழக்குக்கும் தனித்தனியாக அரசு அரசாணை பிறப்பிக்கபட்டது. இந்நிலையில், நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தபோது மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்து கொண்ட  நீதிபதி செல்வகுமார் அரசியல் தலைவர்களான மார்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 6 பத்திரிகைகள் உள்ளிட் 50 பேர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

More
>