அண்ணா பல்கலைக்கு பொறுப்பு பதிவாளர்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக முழு நேர பதிவாளராக இருந்த கணேசனுக்கு பிறகு பொறுப்பு பதிவாளர்கள்தான் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கணேசனை தொடர்ந்து, குமார், கருணாமூர்த்தி, ராணி மரிய லியோனி வேதமுத்து ஆகியோர் பொறுப்பு பதிவாளர்களாகவே நியமனம் செய்யப்பட்டனர். கடைசியாக பொறுப்பு பதிவாளராக இருந்த ராணி மரிய லியோனி வேதமுத்து 9ம் தேதி (இன்று) ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய பதிவாளராக யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் பொறுப்பு பதிவாளரையே நியமனம் செய்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் அறிவித்துள்ளார். அதன்படி பொறுப்பு பதிவாளராக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி சிவில் துறை பேராசிரியர் ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Related Stories:

More
>