தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா: 1,473 பேர் டிஸ்சார்ஜ்: 20 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை..!!

சென்னை:  மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட  அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,359 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,75,592 ஆக உள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 35,754 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அதிகபட்சமாக நேற்று சென்னையில் 169 பேர், கோவையில் 140 பேர்,  செங்கல்பட்டில் 103 பேர் என 3 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Related Stories:

More
>