2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவுக்கு அறிவிப்பு!!

ஆஸ்லோ : 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த வாரம் முதலே 2021ம் ஆண்டில் மருத்துவதுறை, இயற்பியல் துறை, வேதியியல், இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. .பத்திரிகையாளர்களான  மரியா ரெசா (பிலிப்பைன்ஸ்), டிமிட்ரி முராட்டா (ரஷ்யா) ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக  இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படும். மரிய ரெசா அமெரிக்க பத்திரிகையாளராகவும், டிமிட்ரி முராட்டோ ரஷ்ய பத்திரிகையாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: