×

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது : நீதிபதிகள் உத்தரவு!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிமுக கோஷ்டி மோதல் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் ராஜேந்திரபாலாஜி உள்பட 10 பேர் மீது, கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை, திருவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி மற்றும் 4 பேர்  தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : Rajendra Balaji ,Minister , உயர்நீதிமன்றம், காவல்துறை,அதிமுக
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...