×

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!: சிங்கப்பூரில் பொது இடங்களில் விதிகளை மீறுபவர்களை எச்சரிக்கும் ரோபோக்கள்..ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் மக்கள்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொது இடங்களில் தவறாக நடந்துகொள்பவர்களை கண்காணிக்கும் வகையில் ரோபோக்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனை பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். தொழில்நுட்பத்திற்கான சிறந்த உதாரணம் ரோபோக்கள். சந்தையில் நாள்தோறும் வித்யாசமான செயல்திறன் கொண்ட ரோபோக்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில பயன்பாட்டிற்கும் வர தொடங்கியுள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரில் ரோபோ ஒன்று மக்கள் நடமாடும் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளது. சேவியர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, பொது இடங்களில் சட்ட விதிகளுக்கு உட்படாமல் அதனை மீறும் நபர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஹோம் டீம்ஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஏஜென்சியால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோக்களில் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள், முறையாக வாகனங்களை நிறுத்தாதவர்கள் மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களை இந்த ரோபோ தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. பரபரப்பான வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட இந்த நவீன ரோபோவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். கடந்த மாதம் 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அந்த முயற்சி வெற்றிபெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ரோபோ சேவையை சிங்கப்பூர் அரசு தற்போது விரிவுபடுத்தியுள்ளது.


Tags : Singapore , Singapore, patrol, robots
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...