×

தாசிரஅள்ளி ரயில்வே பாலத்தின் அடியில் மழைநீர் தேக்கம் -அகற்ற வலியுறுத்தல்

அரூர் : மொரப்பூர் வழியாக தாசிரஅள்ளி செல்லும் பாதையில், ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கி நிற்பதால், அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வழியாக சிந்தல்பாடி, ராமியம்பட்டி, தென்கரைகோட்டை, தொங்கனூர், வகுத்தப்பட்டி, கடத்தூர், அரூர் உள்பட பல ஊர்களுக்கு பாலத்தின் அடியில் உள்ள பாதையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சிறிதளவு மழை பெய்தாலும், பாலத்தின் அடியில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாலத்தின் அடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dasiraalli , Arur: On the way to Dasiraalli via Morappur, the road will be used as rain water is stagnant under the railway bridge.
× RELATED தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு