×

சித்தூரில் மேளம் அடிக்கும் கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்- ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சித்தூர் :  சித்தூரில் மேளம் அடிக்கும் கலைஞர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   மேளம் அடிக்கும் கலைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர்  தலைமையில்     சித்தூரில் அம்பேத்கர் பவனில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் சித்தூர் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட மேளம் அடிக்கும் கலைஞர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மேளம் அடிக்கும் கலைஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் மார்ல்லா சீனிவாஸ் பேசியதாவது: ஆதிகாலத்திலிருந்து மேளம் அடிக்கும் கலைஞர்கள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் மேளம் அடித்து அவர்கள் வழங்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியால் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வருடங்களாக மேளம் அடிக்கும் கலைஞர்களுக்கு வேலை இல்லாமலும் உண்ண உணவு  இல்லாமலும் பெரும் அவதிப்பட்டு வருகிறன்றனர்.

அவர்களின் குடும்பங்கள் பெரும் கஷ்டத்தில் இருந்து வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மாநிலம் முழுவதும் மேளம் அடிக்கும் கலைஞர்கள் சங்கம் ஏற்படுத்தி அரசிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் செய்தோம். இதனால் அப்போதைய அரசு மேளம் அடிக்கும் 55 வயது கடந்த கலைஞர்களுக்கு மாதம் ₹3000 நிதி உதவி வழங்கி வந்தது.

இதனால் மேளம் அடிக்கும் கலைஞர்களின் குடும்பம் பயன் அடைந்து வந்தது. தற்போது 2019ம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போதிலிருந்து பதிவு செய்து கொண்ட 55 வயது கடந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை.இதுகுறித்து கடந்த மாதம் கலெக்டர் அலுவலகம் முன்பு சித்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மேலும் அடிக்கும் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மேளம் அடித்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

ஆனால் இதுவரை மாநில அரசு எங்கள் போராட்டத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்கள் சங்கம் சார்பில் 45 வயது கடந்தவர்கள்  அனைவருக்கும் மாதம் ₹4ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆட்சியில் 55 வயது வந்தவர்களுக்கு மட்டுமே மாதம் ₹3000 நிதி உதவி வழங்கி வந்தார்கள்.

தற்போது 45 வயது கடந்தவர்களுக்கு ₹4 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என சங்க நிர்வாகிகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேளம் அடிக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். மேளம் அடிக்கும் உபகரணங்களை வாங்க அரசு நிதி உதவி வழங்க வேண்டும். மேளம் அடிக்கும் கலைஞர்கள் உடல்நலக்குறைவால் உயிர் இழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ₹10லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியால் நகரங்களிலும், மாநகரங்களிலும் மேளம் அடிக்கக் கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை உடனடியாக ரத்து செய்து மேளம் அடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வீடில்லாத மேளம் அடிக்கும் கலைஞர்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்.

இல்லை என்றால் மாநிலம் முழுவதும் உள்ள மேளம் அடிக்கும் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசினார். இதில் மேளம் அடிக்கும் கலைஞர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடரமணா, பொருளாளர் பிரதீப், செயலாளர் நாக ராணி உள்பட மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட 66 மண்டலத்தை சேர்ந்த மேளம் அடிக்கும் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector's Office ,Chittoor , Chittoor: A consultative meeting of drummers was held in Chittoor yesterday. If the demands are not met the Collector
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்