கொடைக்கானலை போல் மீண்டும் ஒரு கூத்து குளத்தில் மிதந்த போதை ஆசாமி -திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மதுபோதையில் குளத்தில் மிதந்தவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ளது கொட்டப்பட்டி குளம். நேற்று இந்த குளத்தில் சுமார் 3 மணிநேரமாக ஆண் ஒருவர் இறந்தது போல் மிதந்து கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதை கண்டு குளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஊருக்குள் தகவல் பரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்ததும் ஏடிஎஸ்பி லாவண்யா, திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தினகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது குளத்தில் மிதந்தவர் உயிருடன் இருப்பது தெரிந்தது. பின்னர் அவரை மீட்டு விசாரித்ததில் கொட்டப்பட்டியை சேர்ந்த ரங்கநாதன் (32) என்பதும், மதுபோதையில் அவர் மிதந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடைக்கானல் ஏரியில் மதுபோதையில் மிதந்த ஒருவரை போலீசார் எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>