×

நெல்லியாம்பதி அரசு பழ பண்ணையில் ஆரஞ்சு, காய்கறி விற்பனை துவக்கம்

பாலக்காடு : பாலக்காடு அடுத்த நெல்லியாம்பதி அரசு பழ பண்ணையில் ஆரஞ்சு மற்றும் காய்கறி விற்பனை துவங்கியுள்ளது.பாலக்காடு மாவட்டம், நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி சுற்றுலா தலத்தில் உள்ள அரசு ஆரஞ்சு மற்றும் காய்கறி பண்ணையில் அறுவடை சீசன் துவங்கி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 2 டன் ஆரஞ்சு விளைச்சல் எடுக்கப்பட்டது. இங்கு அறுவடையாகும் ஆரஞ்சு பழங்கள், பழச்சாறாக விற்பனை செய்வது வழக்கம்.

இதுகுறித்து பழ பண்ணையின் கண்காணிப்பாளர் நந்தகுமார் கூறியதாவது:

இந்த ஆண்டு 25 ஹெக்டரில் 6 ஆயிரம் ஆரஞ்சு நாற்றுகள் நடப்பட்டன. இதில், 3 ஆயிரம் நாக்பூர் மந்தாரின் பிரிவை சார்ந்த ஹைப்ரீடு இனத்தை சேர்ந்தது. மீதமுள்ளவை நெல்லியாம்பதி லோக்கல் இனத்தை சேர்ந்தது. நெல்லியாம்பதி அரசு ஆரஞ்சு பண்ணையில் 80 ஹெக்டரில் காப்பி, 10 ஹெக்டரில் பாசன் ப்ரூட், 20 ஹெக்டரில் கொய்யா, 14 ஹெக்டரில் மா, 10.30 ஹெக்டரில் ரப்லெமண், 2 ஹெக்டரில் எலும்மிச்சையும் பயிரிடப்பட்டு உள்ளது.

காபேஜ், காளிபிளவர், காரட், பீட்ரூட், ராடிஷ், பீன்ஸ், க்ரீன்பீஸ், மல்லி, தண்டுப்பயிர், தக்காளி, மிளகாய், கத்திரி, கீரை, வெள்ளரி, தர்பூசணி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகிய காய்கறிகள் விளைச்சல் எடுப்பதற்கு நிலங்கள் பதப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் விளைச்சல் எடுக்கப்படும்.

2020-21 நடப்பாண்டு 5 டன் காய்கறிகள் விளைச்சல் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளுக்கு ஏராளமான மவுசு உள்ளது. நெல்லியாம்பதி வரும் சுற்றுலா பயணிகள் பழங்கள், காய்கறிகளை நேரடியாக வாங்கி செல்கின்றனர். தற்போது, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என பழ பண்ணையின் கண்காணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : Nelliamphthy Government Fruit Ranch , Palakkad: Orange and vegetable sales have started at the Nelliyampathy Government Fruit Farm next to Palakkad. Palakkad District, Nemmara
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...