ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை கின்னஸ் சாதனைக்காக 2,980 கிமீ ஓடும் இளைஞர்

ராமேஸ்வரம் : கின்னஸ் சாதனைக்காக 2,980 கிமீ தூரத்தை ஓடி கடக்க திட்டமிட்டுள்ள ஹரியானா மாநில இளைஞர், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று தனது தொடர் ஓட்டத்தை துவக்கினார்.

ஹரியானா மாநிலம், ரேவரி மாவட்டம் கோஸ்லி பகுதியை சேர்ந்தவர் நரேந்தர்சிங்(26). பட்டதாரியான இவர் மலையேறும் பயிற்சி பெற்றவர். இந்தியா, தான்சானியா, ரஷ்யா ஆகிய இடங்களில் மலையேற்றத்தில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளார்.

தற்போது கின்னஸ் சாதனையில் இடம் பெறும் முயற்சியாக 2,980 கிமீ தூரத்தை 50 நாட்களில் ஓடி கடக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது சாதனை ஓட்டத்தை துவங்கினார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுர வாயில் முன்பு இவரது சாதனை ஓட்ட பயணத்தை பாஜ மாவட்ட தலைவர் முரளீதரன் துவக்கி வைத்தார். பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், நரேந்தர் சிங்கை பாராட்டி வாழ்த்தினர். நாள் ஒன்றுக்கு 50 கிமீ தூரத்தை ஓடிக்கடக்க திட்டமிட்டுள்ள நரேந்தர்சிங் 50 முதல் 55 நாட்களில் 2,980 கிமீ தூரத்தை கடந்து இறுதியில் அயோத்தியை சென்றடைய முடிவு செய்துள்ளார்.

Related Stories: