நம்பர் 1 அம்பானி... நம்பர் 2 அதானி..இந்தியாவின் 100 கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு : 6 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்

டெல்லி : இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 6 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.மேலும் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவிலேயே பெரும் கோடீஸ்வரர் என்ற பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் பிடித்துள்ளார். 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து முகேஷ் அம்பானியே நம்பர் 1 கோடீஸ்வரராக திகழ்கிறார். அவரின் சொத்து மதிப்பு 68 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.ம்பானியை தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 2 கோடீஸ்வரர் என்ற பெருமையை, கவுதம் அதானி பெற்றிருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 74.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.அதானியை தொடர்ந்து 31 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஹெச்.சி.எல் நிறுவன தலைவருமான சிவ நாடார் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 பெண்களின் விவரம் :

*ஓபி ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் ரூ.1.34 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளார்.

*ஹேவல்ஸ் நிறுவனத்தின் வினோத் ராய் குப்தா பட்டியலில் ரூ.56,782 கோடி சொத்து மதிப்புடன் 24-ம் இடத்தில் உள்ளார்.

*யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லீனா திவாரி ரூ.32,874 கோடி சொத்து மதிப்புடன் 43-ம் இடத்தில் உள்ளார்.

*பைஜூஸ் நிறுவனத்தின் இணைநிறுவனர் திவ்யா கோகுல்நாத் ரூ.30,265 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் 47-ம் இடத்தில் உள்ளார்.

*பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா ரூ.29,144 கோடி மதிப்புடன் பட்டியலில் 53-ம் இடத்தில் உள்ளார்.

*டாஃபே குழுமத்தின் மல்லிகா ஸ்ரீனிவாசன் ரூ.21,596 கோடி சொத்து மதிப்புடன் 73-ம் இடத்தில் உள்ளார்.

Related Stories:

More