×

ரெப்போ வட்டி விகிதம் 4%ஆக தொடரும்.. 2021- 22 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.5% இருக்கும் : ரிசர்வ் வங்கி கணிப்பு

மும்பை : குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கூடும். இதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்து அதன் முடிவுகளை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் அறிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி, அனைவரும் கணித்தபடியே ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 3.35 சதவீதம் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதன் மூலம் வட்டி விகிதங்களில் எட்டாவது முறையாக மாற்றங்கள் செய்யாமல் பழைய நிலையிலேயே நீடிக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறையக் கட்டாயம் வாய்ப்பு இல்லை. இதன் மூலம் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடுவோர் தற்போது வங்கிகளில் இருக்கும் மிகவும் குறைவான வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது.மேலும் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், 2021 - 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2021-22 இரண்டாம் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும். 2022- 23ம் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும்.2022 நிதியாண்டில் நுகர்வோர்  பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர்  பணவீக்கம் 5.2% ஆக இருக்கும். என்று தெரிவித்தார்.


Tags : India ,RBI , ரெப்போ ,வட்டி,விகிதம் ,ரிசர்வ் வங்கி
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...