×

ஆப்கானிஸ்தான் விவகாரம்!: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாநாட்டுக்கு தாலிபான்களை அழைக்க ரஷ்யா முடிவு..!!

மாஸ்கோ: ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்துக்கொள்ள வருமாறு தாலிபன்களுக்‍கு அழைப்பு விடுக்‍க ரஷ்யா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். தாலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதலே சர்வதேச நாடுகளில் போக்குகள் சற்று மென்மையாக காணப்படுகிறது.

குறிப்பாக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தாலிபான்களுடன் நட்புறவை கடைபிடித்து வருகின்றன. தாலிபான்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், 20ம் தேதி இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாநாட்டுக்கு தாலிபான்களை அழைக்க ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. வருகின்ற 12ம் தேதி ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதை தொடர்ந்து ரஷ்யாவில் சர்வதேச பேச்சுவார்த்தை மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது. வருகின்ற 20ம் தேதி மாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள வருமாறு தாலிபான்களுக்‍கு அழைப்பு விடுக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் சமீர் காப்ளூ தெரிவித்துள்ளார். பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும் என கருதப்படுகிறது. மாஸ்கோவில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் மாநாடு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Afghanistan ,Russia ,Taliban ,India ,China , India, China, International Conference, Taliban, Russia
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...