×

ஜப்பானில் நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். தலைநகர் டோக்கியோவில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள்  குலுங்கின. பாலங்கள் அதிர்ந்தன. இதனால், அவற்றின் மீது சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கு பீதியில் நிறுத்தப்பட்டன. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து, சாலைகளில் பாதுகாப்பாக நின்றனர். டோக்கியோவின் கிழக்கே சிப்பா என்ற இடத்தில், 80 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. ரிக்டேர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக இது புதிவானது. இந்த நிலநடுக்கத்தால், சுனாமி அபாயம் விடுக்கப்படவில்லை.  மேலும், உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Tags : Japan , Japan, earthquake, Richter
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...