11 வருடங்களுக்கு பிறகு நடிகை ரேவதி இயக்கும் படத்தில் கஜோல்

சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள ரேவதி, டி.வி தொடர்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். பிற நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருப்பதுடன் பின்னணியும் பாடியிருக்கிறார். தவிர, ஆங்கிலத்தில் மித்ர் மை பிரெண்ட், இந்தியில் பிர் மிலேங்கே, மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரளா கஃபே,  ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், 11 வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கும் 5வது படத்தில் கஜோல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரேவதியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ள கஜோல், ‘ரேவதி சொன்ன கதையை கேட்டவுடன், இந்த வாய்ப்பை மறுக்க கூடாது என்று உடனே கால்ஷீட் கொடுத்தேன். நாங்கள் இணைந்து பணிபுரியும் படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போது முதல் அதிகரித்துள்ளது. கண்டிப்பாக எங்கள் கூட்டணி மிகவும் வித்தியாசமான படத்தை கொடுக்கும். இப்படத்துக்கு ‘தி லாஸ்ட் ஹர்ரே’ என்று பெயரிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>