×

ராஜஸ்தான் பரிதாப தோல்வி

ஷார்ஜா: கொல்கத்தா நைட் ரைடர்சின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் சுப்மன்கில்- வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி தொடக்கத்தை தந்தனர். இதில், வெங்கடேஷ் 38 ரன்(35 பந்து,3 பவுண்டரி, 2சிக்சர்) அடித்து திவாதியா பந்தில் அவுட் ஆனார். அதிரடி காட்டிய சுப்மன்கில் 56(44 பந்து,4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து மோரிசின் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் ஆனார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் குறைந்த பந்தை சந்தித்து பவுண்டரியும், சிக்சருமாக பறக்கவிட்டனர். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 171 ரன் எடுத்தது. இதற்காக 7 பவுலர்களை பயன்படுத்தினார் கேப்டன் சாம்சன். பின்னர், 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ‘டக்’ அவுட் ஆனார். அடுத்து கேப்டன் சாம்சன் உள்பட மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எனினும் மற்றொரு பக்கம் அதிரடி காட்டிய திவாதியா 44 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) பறக்க விட்டார்.

இந்நிலையில், 17வது ஓவரில் மாவியின் முதல் பந்திலேயே போல்ட் ஆனார். ராஜஸ்தான் அணி 85 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி, 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மாவி 3.1 ஓவரில் 21 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பெர்குசன் 3 விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajasthan , Rajasthan, IPL, Kolkata, defeat
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...