வட மாநில தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு

புழல்: செங்குன்றம் அருகே கிரான்ட்லைன் கிராமத்தில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்  தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் கம்பெனியையொட்டியுள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தீபக்(24) என்பவரின் 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பியோட முயன்றனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  தீபக், அவர்களை விரட்டி பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த  அவர்கள், கத்தியால் தீபக்கை வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த தீபக்கை, சக ஊழியர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories:

More
>