×

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 4 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரம்பாக்கம், எளாவூர், மாநெல்லூர், மேல்முதலம்பேடு  ஆகிய ஊராட்சிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் 6 வார்டுகளில் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் தேர்தல் நடைபெற உள்ள 2 வார்டுகளை நேற்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அ. ஞானசேகரன் ஐஏஎஸ் நேரில் ஆய்வு செய்தார். கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆரம்பாக்கம், எளாவூர், மாநெல்லூர், மேல்முதலம்பேடு ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டுகள் உள்ளன.

இதில் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் 2 வார்டுகளில் 9ம் தேதி தேர்தலை நடத்த தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுதேவன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், ஆரம்பாக்கம், எளாவூர், மேல்முதலம்பேடு, மாநெல்லூர் ஊராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர்கள் என 4 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தனர்.  அங்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் ெசய்யாததால். அந்த ஊராட்சிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஏனாதிமேல்பாக்கத்தில் மட்டும் தேர்தல் என முடிவானது. அதன்படி, ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி 2வது வார்டில் 4 பேர், 5 வது வார்டில் 2 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அங்கு மட்டும் 9ம் தேதி  தேர்தல்  அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான வாசுதேவன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்நிலையில், மேற்கண்ட 2 வார்டுகளில் தேர்தல் நடத்தும் பணிகளை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அ. ஞானசேகரன் ஐஏஎஸ் ேநற்று நேரில் சென்று ஆய்வு  நடத்தினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சுதா, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உடனிருந்தனர். இதில் அங்கு வாக்கு சாவடி மையங்களில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தார். பின்னர் தேர்தலை அமைதியாக நடத்தும் படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தி, ஆலோசனைகளையும் வழங்கினார்.

Tags : Gummidipoondi Panchayat Union , Gummidipoondi, Panchayat Union, Candidates, Selection
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...