திருப்போரூர் கந்தசுவாமி கோயில் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை வாரம் முழுவதும் திறக்க வலியுறுத்தி தமிழக பா-.ஜ.க. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய தலைவர் கோபி வரவேற்றார். பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் தனசேகரன், மாவட்டத் தலைவர் (அரசு தொடர்பு பிரிவு) சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோயில்களை பக்தர்களுக்கு வழிபாட்டிற்காக திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் பிரபு நன்றி கூறினார்.

Related Stories: