திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ஆவடி நாசர் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.அண்ணாகுமாருக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் வீடு, வீடாகச் சென்று கடந்த நான்கு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை கூறி தீவிரமாக பூட்டு, சாவி சின்னத்திற்கு வாக்குசேகரித்தனர். அப்போது பெண்கள் உற்சாகமாக திரண்டு வந்து சூரத் தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் வெற்றி திலகமிட்டு வரவேற்பளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி துணை பெருந்தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் நடுகுத்தகை மா.ராஜி, கே.ஜெ.ரமேஷ், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், ஜி.விமல்வர்ஷன், ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், எம்.குணசேகரன், பா.கந்தன், வழக்கறிஞர்கள் என்.பி.மாரிமுத்து, டி.மகா, மோகன், சுரேஷ்குமார், டி.கே.பாபு, வி.ஜெ.உமாமகேஸ்வரன், டி.ஆர்.திலீபன், ஜிசிசி.கருணாநிதி, ஜி.சுகுமார், பரணிதரன், பிரதீப், கபில்ராஜ், மு.தே.ராஜேஷ், சர்மன்ராஜ், தமிழன், சுப்பிரமணி, ராமகிருஷ்ணன், வெங்கடேசன், ஏழுமலை, இயேசு, பொன்னையன், தசரதன், பாலுகான், லல்லி பாபு, ஆனந்தன், வெங்கடேசன், ஹரிஹரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

More
>