காஞ்சி, செங்கை மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய 3 ஒன்றியங்களில் முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் பூட்டி சீலிடப்பட்ட அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப் பெட்டிகள் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப் பெட்டிகள் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப் பெட்டிகள் திருப்புலிவனம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பூட்டி சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்குப் பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் வாக்கு எண்ணும் நாளுக்கு முந்தைய நாள் முதல் வாக்கு எண்ணும் பணி முடிவடையும் நாள் வரை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வருகிறது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டம் நிறைவுபெற்ற உத்தரமேரூர் ஒன்றியத்தில் திருப்புலிவனம் அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டி பாதுகாப்பு அறையை  சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் கண்காணிப்பு அறையை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 288 வாக்குச் சாவடிகளில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் கேளம்பாக்கம் அருகே படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் கதவுகள், ஜன்னல் போன்றவை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>