×

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பவானிப்பூர் எம்எல்ஏவாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். மேற்கு வங்க மாநிலம், பவானிப்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜ வேட்பாளரை காட்டிலும் 58,835 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், ஜாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சியை சேர்ந்த ஜாகிர் உசேன், சம்செர்கன்ச் தொகுதியில் போட்டியிட்ட அமிருல் இஸ்லாம் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதனை தொடர் ந்து மம்தா பானர்ஜி நேற்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு சபாநாயகர் தான் பதவி பிரமாணம்  செய்து வைப்பது வழக்கமான நடைமுறையாகும். எனினும், இந்த நடைமுறையை மாற்றி ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் எதிர்கட்சியான பாஜவை சேர்ந்த எந்த எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.


Tags : Mamata Banerjee , By-election, Mamata, Governor, sworn in
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்