தெற்காசிய கோப்பை கால்பந்து இலங்கையுடன் இந்தியா டிரா பைனல் வாய்ப்பு கேள்விக்குறி

மாலே: தெற்காசிய கோப்பை கால்பந்து  போட்டி மாலத்தீவு தலைநகர் மாலேயில் நடக்கிறது.   இதில் பங்கேற்றுள்ள அணிகளில்இந்தியா தான்  வலுவான அணி. ஆனால் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா தான் செய்தது. பைனலுக்கு முன்னேற வெற்றி அவசியம் என்ற நிலையில்  இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் நேற்று இலங்கையுடன்  மோதியது.இந்தியா எளிதில் வெல்லும்,  என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப ஆட்டம் முழுவதும் இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது.  

ஆட்டத்தில் 73சதவீத நேரம் இந்திய வீரர்கள் வசம்தான் பந்து இருந்தது. சுமார்  11 முறை கோலடிக்க இந்தியா முயன்றது. அதில் ஒருமுறைதான் இலக்கை நோக்கிச் சென்றது. ஆனால் அது கோலாக வில்லை. இலங்கை ஒருமுறைதான் கோலடிக்க முயன்றது. கடைசி வரை இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில்  டிரா ஆனது.

அடுத்தடுத்து டிரா செய்ததால் இந்தியா வெறும் 2 புள்ளி களுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. அதனால் இந்தியா பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களில் இலங்கையை விட வலுவான நேபாளம், மாலத்தீவு அணிகளை இந்தியா வெல்ல வேண்டும், கூடவே  முதல் 2 இடங்களில் இருக்கும் நேபாளம், வங்கதேசம் மற்ற ஆட்டங்களில்  தோற்க வேண்டும். அந்த அதிசயங்கள் நடந்தால் இந்தியா  பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.  

Related Stories:

More
>