×

நீலகிரி யானை வழித்தடம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

புதுடெல்லி: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுக்களையும் தள்ளுபடி செய்து  உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில், ‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்து ஓராண்டு ஆகியும் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் தற்போது வரையில் அகற்றப்படவில்லை. அதனால், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மாவட்ட ஆட்சியர், வனத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

Tags : Nilgiris ,Supreme Court , Nilgiris, Elephant Route, Supreme Court, Contempt Case
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்