×

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: அங்குள்ள மீனவர்களும் தாக்கி விரட்டினர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், திடீரென தமிழக மீனவர்களை கற்களால் தாக்கினர். உடனே அங்கிருந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றனர். பின்னர் வேறு பகுதிகளில் மீன் பிடித்தபோது, நாட்டுப்படகுகளில் வந்த இலங்கை வலைபோட் மீனவர்கள், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி விரட்டினர். இலங்கை கடற்படையினரும் இவர்களுடன் சேர்ந்து விரட்டியடித்தனர். இதனால் மிரண்டு போன அவர்கள் உடனடியாக அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று தப்பினர்.  இதனால் நள்ளிரவே ஒரு சில படகுகள் கரை திரும்பின. வேறு பகுதிகளுக்கு சென்று இரவு முழுவதும் மீன் பிடித்தவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். அனைத்து படகுகளிலும் மீன்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் படகிற்கு தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.


Tags : Rameswaram , Sri Lankan navy attacks Rameswaram fishermen
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...