விமானப்படை பெண் அலுவலர் பலாத்காரம் கைதான அதிகாரியை 7 நாள் காவலில் விசாரிக்க மனு: கோவை மகளிர் போலீசார் தாக்கல்

கோவை: கோவையில் விமானப்படை பெண் அதிகாரி பலாத்கார வழக்கில் கைதான அதிகாரியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மகளிர் போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். கோவை ரெட்பீல்டில் விமானப்படை கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சிக்கு வந்த 28 வயது பெண் அதிகாரியை பலாத்காரம் செய்ததாக சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி அமித்தேஸ் (30) கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை விமானப்படையினரே விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த வழக்கில் உள்ளூர் போலீசார் தலையிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கைதான அதிகாரி அமித்தேஸ் விமானப்படை பிரிவின் காவலில் உள்ளார். இந்நிலையில் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார், கைதான அதிகாரியை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என கோவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், நாங்கள்தான் இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறோம். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை விமானப்படை அதிகாரிகள் விசாரிக்காமல் நாங்களே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>