×

மனைகள் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்: ஜி ஸ்கொயர் குழுமம் விளக்கம்

சென்னை: ஜி ஸ்கொயர் குழும தலைமை செயல் அதிகாரி ஈஸ்வர் நாகராஜன் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒருவரின் கனவுகளுக்கு ஏற்ற சரியான வீடு கிடைப்பது இயலாத ஒன்றாகும். வீட்டு மனையை பொறுத்தவரை அவரவர் விரும்பிய வீட்டை, அவரவர் பட்ஜெட்டில் சிறப்பாக கட்ட முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளை போன்று, மனை உரிமையாளர்கள் தங்கள் இடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தேவையில்லை. அவர்களுக்கான முழுமையான தனியுரிமை உள்ளது. ரியல் எஸ்டேட் மதிப்பீடு என்பது நிலம் சார்ந்தே இருக்கும்.

முழு முதலீடும் நிலத்தில் மட்டுமே உள்ளது. மேலும், கட்டுமான நிறுவனங்கள் வாக்குறுதியளித்த தேதியில் குடியிருப்பை வழங்க தாமதமானால், அது தவணைக்கு முன்கூட்டிய வட்டி செலுத்துதல், வருமான வரி சலுகைகளை இழப்பது, வாடகை வருமானத்தை இழப்பது போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் விதி மீறி கட்டப்பட்டு இருந்தால் அந்த பிரச்னையை வீட்டை வாங்குபவரே எதிர்கொள்ள வேண்டும்.ஆனால் மனை உரிமையாளர்களுக்கு இதுபோன்ற எந்த பிரச்னையும் இல்லை. ஊரடங்குக்கு பிந்தைய நிலையில் வாடிக்கையாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதிலிருந்து மனை வாங்குவதற்கு மாறி உள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் தற்போது 5 சதவீதம் உள்ள மனைகளின் விற்பனையானது அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 15 சதவீதமாக உயரும்,’’ என்றார்.

Tags : G Square Group , Benefits of Buying Lands: G Square Group Description
× RELATED மனைகள் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்: ஜி ஸ்கொயர் குழுமம் விளக்கம்