×

தமிழகத்திற்கு மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. ஒன்றிய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு நேற்று மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கிலிருந்து விடுவித்துள்ளது. அந்த 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 50 பார்சல்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை 5.30  மணிக்கு புனேவிலிருந்து சென்னை வந்தன. அவை குளிர்சாதன வாகனங்களில் ஏற்றி  தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags : Govshield ,Tamil Nadu , Another 6 lakh dose of Govshield vaccine for Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...