அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் 35 செவிலியர்கள் நியமனம்: 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி வெளியிட்ட அறிக்கை: கோவிட் 19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 35 செவிலியர்கள் ரூ.14 ஆயிரம் சம்பளத்திற்கு ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன.

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இந்த அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர் மற்றும் பேராசிரியர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், எழும்பூர், சென்னை-8. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.10.2021, குறிப்பு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு (11.10.2021) பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Related Stories: