×

கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்ற தடை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தமிழக கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது சம்பந்தமாக செப்டம்பர் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும் சென்னைவழக்கறிஞர் அஸ்வத்தாமன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், ‘கோயில் நிர்வாகத்தில் மட்டுமே அறநிலையத்துறை தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில்  தலையிட முடியாது. வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Case , Case seeking ban on melting of jewelery in temples into gold nuggets: Hearing soon in iCourt
× RELATED சைகை மூலம் அம்பு விட்ட விவகாரம்: பாஜக...