அரியானாவிலும் அதிர்ச்சி பாஜ எம்பி கார் மோதி விவசாயி காயம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் விவரத்தை இன்றைக்குள் அளிக்கும்படி இம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கெடு விதித்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக லவகுசா, ஆசிஸ் பாண்டே என்ற 2 பேரை உபி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆசிஸ் மிஸ்ராவையும் இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இவர் சென்ற கார் மோதிதான், விவசாயிகள் பலியானதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து, அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் உள்ள நாராயண்கரில்  விவசாயிகள் நேற்று ஊர்வலம் சென்றனர். அப்போது, அம்பாலா பாஜ எம்பி நயாப் சைனியின் கார் இந்த ஊர்வலத்தில் வேகமாக புகுந்து இடித்ததில், விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>