அரசு விதிமுறைகளுக்கு மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அரசு விதிமுறைகளுக்கு மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3 ஆயிரம் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது: சாயப்பட்டறை கழிவுகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும் எனவும்,ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும் என்றும், நாமக்கல் மாவட்டத்தில அமைக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில ஒன்றிய பயனாளிகள் நிதி கொண்டு இந்த சுத்திகரிப்பு நிலையம்  அமைக்கப்படும் என கூறிய அவர்,கலர் டையிங் செய்யக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பேசிய அவர், தோல் தொழில்சாலைகளில் இருந்து வரும் அபாய கழிவு நீர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 9 லட்சம் டன் உள்ளது. அதை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு விதிமுறைகளுக்கு மீறி தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இன்னும் 15 நாட்களில் மக்கள் இயக்கம் விரைவாக செயல்பட்டு, அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதிப்பட கூறினார்.

Related Stories: