×

அரசு பதவிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

சென்னை: மத்திய அமைச்சகங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த 18,989 பேர் பணியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அரசு பதவிகளில் பதவி உயர்வு வழங்கும் போது எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை பின்பற்றுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதவி உயர்வின் போது எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை பின்பற்றுவதை நியாயப்படுத்தும் தரவுகள் இருக்கின்றனவா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசின் 19 அமைச்சகங்களில் பணியாற்றுபவர்கள் குறித்த தரவுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 19 அமைச்சகங்களில் பணியில் இருப்பவர்களில் 18,989 பேர் (15.34%) எஸ்.சி சமூகத்தை சேர்ந்தவர்கள். மொத்த ஊழியர்களில் 7,608 பேர் (6.18%) எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர்கள். 21,656 ஊழியர்கள் (17.5%) ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.

Tags : Court , Reservation
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...