குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே சாலையில் விழுந்த ராட்சத பாறைகள்: நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்

குன்னூர்:குன்னூர்  மேட்டுப்பாளையம் சாலையில் லாஸ் பால்ஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் விழுந்த ராட்சத பாறையை நெடுஞ்சாலைத்துறையினர் உடைத்து அகற்றினர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக  மழை பெய்து வருகிறது.  தொடர்ந்து மழை பெய்து வருவதால்  ஆங்காங்கே மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலத்த மழையினால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை  பாதையில் நந்தகோபால் பாலம் அருகே ராட்சத பாறை விழுந்தது. பாறை சாலையோரத்தில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போக்குவரத்தினை சரிசெய்து  நெடுஞ்சாலை துறையினர் உதவியுடன்  பாறையை உடைத்தனர். தொடர்ந்து குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் பொது மக்கள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.

Related Stories: