அனல்மின் நிலையங்கள் நிலக்கரி இருப்பு வைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: அனல்மின் நிலையங்கள் நிலக்கரி இருப்பு வைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 17 ஆலைகளில் நிலக்கரி இருப்பே இல்லாத நிலையில், 27 ஆலைகளில் ஒருநாளுக்கான இருப்பு மட்டுமே இருக்கின்றன. சுமார் 100 ஆலைகளில் ஒருவாரத்திற்கு குறைவான இருப்பு மட்டுமே உள்ளது.

இந்நிலையில் அனல்மின் நிலையங்கள் நிலக்கரி இருப்பு வைப்பதற்கான கால வரம்புகளை தளர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நிலக்கரி மற்றும் மின்சார துறை அமைச்சகங்கள் இணைந்து மாதாந்திர நிலக்கரி விநியோகத்திற்கான வரைவறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாதத்திற்கு 40 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு வைக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>