காஷ்மீரில் 48 மணி நேரத்தில் 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் 48 மணி நேரத்தில் 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள இட்ஹா சங்கம் என்ற பகுதியில் இன்று காலை 1 பெண் உள்ளிட்ட 2 ஆசிரியர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்கள் இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவர். கொல்லப்பட்ட பெண் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.

48 மணி நேரத்தில் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.கடந்த செவ்வாய் கிழமை அன்று ஸ்ரீநகர் இஃபால் பூங்கா அருகே மருந்தகம் ஒன்றில் நுழைந்த தீவிரவாதிகள் அதன் உரிமையாளரான 70 வயது மக்கன் லால்வை சுட்டுக் கொன்றனர்.அதே நாளில் பேல்பூரி வியாபாரி வீரேந்திர பஸ்வான், டாக்ஸி ஓட்டுநரும் டாக்ஸி ஸ்டேண்ட் சங்கத் தலைவருமான லோன் ஆகிய 2 பேரையும் தீவிரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>