×

திண்டுக்கல் மாவட்டத்தில் அக்.9ல் வலசை பறவைகள் கணக்கெடுப்பு

ஒட்டன்சத்திரம்: உலக வலசை பறவைகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு அக்.9ல் நடக்கிறது. பறவைகள் கணக்கெடுப்பை அனதர் பேஜ் பார் பீப்பிள் சொசைட்டி நிறுவனம் நடத்துகிறது. பறவைகள் கணக்கெடுப்பு ஒட்டன்சத்திரத்தில் துவங்கி விருப்பாட்சி தலையூத்து அருவி, பரப்பலாறு அணை, பாச்சலூர், ஆடலூர், தடியன்குடிசை, கொடைக்கானல் கீழ்மலை பகுதிகள் மற்றும் கண்மாய் பகுதிகளில் நடைபெறுகிறது.

வெளிநாட்டில் இருந்து வலசை வரும் பறவைகளுக்கு உகந்த நேரமாக இருப்பதால், பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள பறவைகள் ஆர்வலர்களை அனதர் பேஜ் பார் பீப்பிள் சொசைட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து இவ்வமைப்பின் இயக்குனர்கள் குமார், முத்துலட்சுமி கூறுகையில், ‘கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வலசை பறவைகள் முன் கூட்டியே வருகை தந்து உள்ளது. ஐரோப்பாவில் இருந்து வலசை வரும் சாம்பல் வாலாட்டிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதி ஓடையில் தென்பட்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது’ என்றனர்.

Tags : Tindukkal District , Migratory bird survey in Dindigul district on Oct. 9
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது