×

சிறுவாச்சூர் மலையடிவார கோயிலில் சுடுமண் சிற்பசிலைகள் உடைத்து சேதம்: மந்திரவாதிகள் சதியா? போலீசார் விசாரணை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மலையடிவாரத்திலுள்ள பெரியசாமி, செல்லியம் மன் கோவிலில் சுடுமண் சிற்ப சிலைகளை மர்ம நப ர்கள் உடைத்து சேதம். மகாளய அமாவாசையின் மாந்திரீக பூஜைகளுக்கு இடை ஞ்சலென நினைத்து மந்தி ரவாதிகள் செய்தசதி செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரம்பலூர் அருகேயூள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுர காளியம் மன் கோயில் உள்ள து. மாவட்டத்தின் சுற்றுலா தலமான இக்கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்உள்ளது. சில ப்பதிகாரக் கண்ணகியின் சினம் தனித்த தலமாகக் கருதப்படும் இக்கோயிலில்தங்கத் தேர் உள்ளது. இக்கோயிலின் தெய்வமான செல்லியம்மன் தன்னை அரக்கனிடமிருந்து காத்த மதுர காளியம்மனுக்கு கோயிலில் தங்க இடமளித்து விட்டு, 3கிமீதொ லைவில் பச்சை மலைத் தொடர்ச்சியிலுள்ள பெரியசாமி மலையடிவாரத்தில் குடியிருப்பதால், வாரத்தில் திங்கள், வெள்ளி மட்டும் சிறுவாச்சூர் கோயிலிலும், இதர நாட்களில் பெரிய சாமி மலையடிவாரத்திலு ள்ள செல்லியம்மன், பெரி யசாமி கோயில்களி லும் பூஜைகள் நடக்கும்.

இதன்கும்பாபிஷேகம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கட ந்த 2015ல் நடைபெற்றதை யொட்டி, இந்துசமய அறநி லையத்துறை நிதியுதவி யுடன் மலையடிவாரத்தில் உள்ள பழைய சிலைகளு க்குப்பதிலாக புதிய சிலை கள் வில்லியனூர் கிருஷ் ணமுனுசாமி என்ற ஸ்தப தியால் பலலட்சம் மதிப்பில் சுடுகழிமண் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டது. பொ ன்னுசாமி சிலை, பெரியசா மி சிலை,கிணத்தடியார், ஆ த்தடியார், செல்லியம்மன், சப்தகன்னியர், செங்கம லையான், கொரப்புலியா ன், புலிகருப்பையா, குதிரைகள், வீரர்சிலைகள், 18 சித்தர்களின் சிலைகளும் செய்துவைக்கப்பட்டது. மிக சக்தியுள்ள சாமிகளைக் கொண்டபெரியசாமிமலை கோயிலுக்கு பெண்கள் யாரும் செல்லக் கூடாது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்த பெரிய சாமி, செல்லியம்மன் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் தலைதனியாக, கைகள் தனியாக என பல பாகங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக செல்லியம்மன் சிலையை இடுப்போடு இர ண்டாக உடைத்துப் போட்டுள்ளனர். மேலும் செங்க மலையான் கோவிலில் உள்ள 18 கன்னிமார் சிலை களில் 5கன்னிமார் சிலை களை இடுப்போடு உடைத் துள்ளனர்.அதோடு அனை த்துக் காவல் தெய்வங்க ளின் ஆயுதங்களையும் உடைத்து வீசியுள்ளனர்.இதனை அறிந்த சிறுவாச் சூர் கோவில் நிர்வாகத்தின ரும், பொதுமக்களும் மிகு ந்த அதிர்ச்சியடைந்துள்ள னர். இதுதொடர்பாக கோயில் செயல்அலுவலர் அரு ண் பாண்டியன் கொடுத்தப் புகாரின்பேரில் பெரம்பலூ ர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள்குறித் து விசாரணை நடத்திவரு கின்றனர்.

மகாளய அமாவாசை
பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மாந்திரீகம் செய்யும் கும்பல், சக்திவாய்ந்த சாமி யான பெரியசாயி, செல்லி யம்மன் தெய்வங்கள் தங் கள் மகாளய அமாவாசை மாந்திரீக பூஜைசெய்யும் தொழிலுக்கு இடையூறாக இருக்குமென்று நினைத்து சிற்பங்களை சிதைத்திருக் கலாம் எனபொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags : Shiruvachur ,Satya , Breaking and damaging terracotta sculptures at Siruvachchur foothills temple: Witches conspiracy? Police investigation
× RELATED அண்ணாமலை மீதான விதிமீறல் புகார்...