இந்தியா முழுவதும் 1,222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலை பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: காணொலியில் டெல்லியிலிருந்து பிரதமர் மோடி ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்தார். ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். இந்தியா முழுவதும் 1,222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலை பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் திறக்கப்படுகிறது என அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் திறக்கப்பட உள்ள 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் மூலம் 10 லிட்டர் வீதம் தர இயலும் என கூறினார். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இருக்கிறது என கூறினார். 

Related Stories: