×

இந்தியாவின் 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பில் மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!!

டெல்லி: நாடு முழுவதும் 7 மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்காக்கள் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்கா அமைப்பதற்கான பி.எம்.மித்ரா திட்டம் நடப்பாண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசாம், மத்தியப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்கள் மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளன. இந்நிலையில், 4,445 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்கா அமைக்க விருப்பப்படும் மாநிலங்கள், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் மாநிலங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் இதன் மூலமாக நேரடியாக 7 லட்சம் பேரும், மறைமுகமாக 14 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.


Tags : India , Mega Textiles, Clothing Park, United States
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!