×

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி : ஆப்ரிக்க நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது!!

ஜெனீவா : உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், மலேரியா தாக்கம் அதிகம் உள்ள ஆப்ரிக்க நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மலேரியா நோயை தடுப்பதற்காக மஸ்க்கியூரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனம் 1987ம் ஆண்டு உருவாக்கியது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால் அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு கானா, கென்யா ஆகிய நாடுகளில் சுமார் 8 லட்சம் சிறார்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மஸ்க்கியூரிக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மஸ்க்கியூரிக்ஸ் மலேரியா தடுப்பூசிக்கு தற்போது தான் உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்து இருந்தாலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே கென்யாவில் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மலேரியா தாக்குதலுக்கு எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.


Tags : World Health Organization , World Health Organization, Glasgow Smithkline, Muscuririx, Malaria
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...