பாசிச சக்திகளை எதிர்க்க வேற்றுமைகளை விலக்கி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை: பாசிச சக்திகளை எதிர்க்க எதிர்க்கட்சிகள் கருத்து வேற்றுமைகளை விலக்கி வைத்து ஒன்றிணைந்து வெகுமக்கள் சக்தியாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  உ.பி.யில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் மோதி 2 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதன் எதிர்விளைவாக நடந்த கொந்தளிப்பில் மேலும் பலர் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல, சட்டீஸ்கர் முதல்வரும் தடுக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் தங்களின் கடமையை ஆற்ற உரிமை கிடையாதா. இதற்கு பிரதமர் வாயே திறக்கவில்லை. நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா?  இந்த பாசிச சக்திகளை எதிர்க்க, எதிர்க்கட்சிகள் கருத்து வேற்றுமைகளை விலக்கி வைத்து ஒன்றிணைந்து வெகுமக்கள் சக்தியாகப் செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

More