×

ஐஎஸ்ஐஎஸ் ஆதவாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

சென்னை: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது.  இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Tags : NIA ,ISIS , ISIS, NIA, indictment
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...