கார் ஏற்றி விவசாயிகள் கொலை ஒன்றிய அமைச்சர் மீது நடிகை குஷ்பு தாக்கு

சென்னை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா ஆகிய இருவரும் அரசு விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றனர்.அப்போது அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த வாகனம் ஒன்று விவசாயிகள் நின்றிருந்த கூட்டத்தில் திடீரென பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பாஜவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில் எழுதியிருப்பதாவது:  விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொன்றது கடுமையான குற்றம். எந்த விதத்திலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை வேண்டும். மனித உயிரைவிட எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம் என்று தெரிவித்துள்ளார்.  சொந்த கட்சியினரையே குஷ்பு கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பாஜ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>